Claim| உரிமைகோரல்

வாகனத்திற்கு தற்செயலான சேதம் ஏற்பட்டால்

Full Insurance

  1. பாலிசி வழங்கிய அலுவலகம் அல்லது அருகில் உள்ள அலுவலகத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

  2. வாகனத்திற்கு பெரிய இழப்பு ஏற்பட்டால், விபத்து நடந்த இடத்தில், நிறுவனத்தால் ஸ்பாட் சர்வேயும் ஏற்பாடு செய்யப்படும்

  3. உரிமைகோரல் படிவத்தைப் பெற்று, அதனுடன் கீழ்கண்ட ஆவணங்களை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்

  • பதிவுச் சான்றிதழின் நகல்.

  • விபத்தின் போது வாகனம் ஓட்டியவரின் ஓட்டுநர் உரிமத்தின் நகல்.

  • பழுதுபார்க்கும் மதிப்பீடு.

  • வணிக வாகனம் எனில் அனுமதி மற்றும் வாகன தர சான்றிதழின் நகல்.

  • காப்பீட்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ஐஆர்டிஏஐ உரிமம் பெற்ற சர்வேயர் மூலம் வாகனம் ஆய்வு செய்யும் வரை வாகனத்தின் பழுதுபார்ப்பைத் தொடங்க வேண்டாம்.

  • FIR copy required if third party liability claim

வாகனம் திருடப்பட்டால்,

  1. உடனடியாக போலீசில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யுங்கள்

  2. பாலிசி வழங்கிய அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உடனடியாகத் தெரிவிக்கவும்.

  3. உரிமைகோரல் படிவத்தைப் பெற்று அதை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

  4. இறுதி போலீஸ் அறிக்கை கிடைத்தவுடன் சமர்ப்பிக்கவும்.

  5. காப்பீட்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட விசாரணையாளருக்கு முழு ஒத்துழைப்பை வழங்கவும்.